கிலாவுவா எரிமலையில் இருந்து ஆறு போல் பெருக்கெடுக்கும் நெருப்புக்குழம்பு: பசிபிக் பெருங்கடலில் கலக்கும் படங்கள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவுவா எரிமலையில் இருந்து ஆறு போல் பெருக்கெடுக்கும் நெருப்புக்குழம்பு கடலில் கலக்கும் காட்சிகள் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த எரிமலை கடந்த 6 வாரங்களுக்கு மேல் சீறிவரும் நிலையில் மலையில் இருந்து நெருப்பாறு பெருக்கெடுத்து வருகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டிடங்களை பொசுக்கி சாம்பலாக்கி விட்டு இந்த நெருப்பாறு பசிபிக் பெருங்கடலில் கலக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.