News

கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய மைத்திரி!

ஜனாதிபதியை சந்திக்க ஆவலோடு காத்திருந்த, ஆயுள் தண்டனை கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஏமாற்றத்துடன், வீடு திரும்பியுள்ளனர்.

வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்த அவர்களை ஜனாதிபதி சந்திக்காத நிலையில் இருவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பரிதாபம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், ஜனாதிபதியிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்க ஆயுள் தண்டனை கைதியான ஆனந்தசுதாகரினின் பிள்ளைகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். எனினும் அவர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை.

இந்நிலையில், குறித்த இருவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இந்த பிள்ளைகளின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையில், தந்தையும் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரும் தந்தையை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய வேண்டும் என கோரி ஜனாதிபதியை சந்தித்து தங்களது கடிதத்தை வழங்கிவிட முயற்சி செய்த போதும் அது கைகூட வில்லை.

ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த சிறுவர்களை அந்த வழியால் வாருங்கள் இந்த வழியால் வாருங்கள் என ஒவ்வொரு பாதையாக காட்டிய போதும் அந்த வழியில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் அவர்கள் பிரிதொரு அதிகாரியிடம் விடயத்தை கூற அவர் சற்று நேரம் கழித்து வந்து ஜனாதிபதி நிகழ்வு முடிந்து புறப்படும் நேரம் வாகனத்தின் அருகில் சென்று கடிதத்தை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இறுதியில் அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை அவர்களிடம் விடயத்தை மன்றாட்டமாக தெரிவித்தும் எவரும் செவிசாய்க்கவில்லை.

இதனையடுத்து, குறித்த கோரிக்கை கடிதத்தை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனிடம் வழங்கிவிட்டு சிறுவர்கள் இருவரும் ஏமாற்றத்துடன், வீடு திரும்பினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top