குழந்தையின் முன்னால் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அனிருத்தா நாயகம்?
ரொறொன்ரோ-பிரம்ரனில் 24-வயதுடைய மனிதன் ஒருவன் பெண் ஒருவரை தொந்தரவு செய்ததுடன் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் பிரம்ரனில் குழந்தை ஒன்றுடன் குறிப்பிட்ட பெண் நடந்து சென்று கொண்டிருக்கையில் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யூன் மாதம் 1-ந்திகதி மாலை 7.45 மணியளவில் கிங்ஸ் குரொஸ் மற்றும் நைட்ஸ்பிரிட்ஜ் வீதி பகுதியில் நடந்துள்ளது.
கொன்வீனியன் கடை ஒன்றின் அருகாமையில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆண் சந்தேக நபர் அணுகியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பெண்ணை அணுகி அவருடன் கதைக்க முயன்ற சமயம் பெண் அவ்விடத்தை விட்டு நடந்து சென்றுவிட்டார். தொடர்ந்து சந்தேக நபர் அப்பெண்ணை சில்வர் நிற செடானில் தொடரந்து குடியிருப்பு தொடர்மாடி ஒன்றை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட கண்காணிப்பு கமரா காட்சிகள் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை இரண்டாவது தடவையாக அணுகியதை காட்டியுள்ளது. கமரா காட்சி பெண் பிள்ளை ஒன்றுடன் நடந்து கொண்டிருக்கையில் மனிதனொருவன் பின்னால் பெண்ணை அடைந்து அவரை பிடிப்பதை காட்டியுள்ளது. மனிதன் சுற்றி திரும்பி பெண்ணை அணுகியுள்ளான்.
பிள்ளை அருகில் நிற்கையில் பெண்ணை மனிதன் அணுகி உடல் தகராறு இடம்பெறுவதற்கு முன் பெண் குடிபானம் ஒன்றை மனிதனின் முகத்தில் வீசியதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர் அதே வாகனத்தில் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டான். செவ்வாய்கிழமை பொலிசார் சந்தேக நபரை பிரம்ரனை சேர்ந்த அனிருத்தா நாயகம் என அடையாம் கண்டுள்ளனர்.
சந்தேக நபரும் அதிகாரிகளிடம் சரணடைந்ததாக கூறப்பட்டது. பாலியல் தாக்குதல், தாக்குதல் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் 905-453-2121ext. 3460 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.