கனடாவின் ஹாலிபாக்ஸ்சில் பப்பிற்கு வெளியே கூட்டமாக நின்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வெள்ளை நிறக் கார் வேண்டுமென்றே மோதியது. மோதியதோடு மட்டுமல்லாமல் அவர்களை சில அடி தூரம் தரதர வென இழுத்தும் சென்ற கொடூரக் காட்சிகள் நடந்திருக்கின்றன. நேற்றிரவு 7.30 மணி அளவில் ஹாலிபாக்ஸ்சின் வெஸ்ட் yarkshire இல் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மற்றும் சிலர் சிறிய காயங்களோடு தப்பித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வெள்ளை நிற கார் ஒன்று வெளியில் கூட்டத்தில் பாடி ஆடிக் கொண்டிருந்த நால்வர் மீது மோதுவதும் அதில் இருவர் பானெட் மீது மோதுவதும் பானெட்டின் மீதே சிலதூரம் பயணிப்பதும் பின் அதில் இருந்து ஒரு நபர் விழுவதும் போன்ற காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் மற்ற கார் போக்குவரத்து ஏதும் நடக்காமல் மக்கள் தடுத்ததால் மேலும் உயிர் பலிகள் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின் ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.