News

கொழுந்துவிட்டெரிந்த குடியிருப்பு: பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய தாயார்.!

அமெரிக்காவில் தென் கரோலினா மாகாணத்தில் குடியிருப்பு ஒன்று கொழுந்துவிட்டு எரிந்ததில் பதறிய தாயார் ஒருவர் தமது பிஞ்சு குழந்தையை ஜன்னல் வழியே வெளியே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கரோலினா மாகாணத்தில் உள்ள ஆண்டர்சன் பகுதியில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டெரிந்த தீயால் பதறிய இளம் தாயார் தமது அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

பின்னர் ஜன்னல் வழியே தமது பிஞ்சு குழந்தையை தூக்கி வெளியே வீசியுள்ளார். குடியிருப்புக்கு வெளியே தயார் நிலையில் நின்றிருந்த நபர் ஒருவர் அந்த குழந்தையை பத்திரமாக கைப்பற்றி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார்.

11 மாதமேயான அந்த பிஞ்சு குழந்தையை தூக்கி வீசியதுடன் அந்த தாயாரும் ஜன்னல் வழியாக குதித்து தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் எஞ்சியவர்களையும் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரு குடியிருப்பானது மிக மோசமாக சேதமடைந்துள்ளது எனவும், எஞ்சிய 3 குடியிருப்புகள் கரும் புகையால் சேதமடைந்துள்ளது என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top