News

சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் உடன் குளோரின் வாயுவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்.

சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் உடன் குளோரின் வாயுவும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த மார்ச் 24-ம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

ஹமா மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள லடாம்நேக் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வக சோதனையில் கூறப்பட்டது.

அதற்கு அடுத்த நாள் மீண்டும் அதே பகுதியில் விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் குளோரின் வி‌ஷ வாயு பயன்படுத்தப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top