News

சுதா­கரை விடு­வித்­து­விட்டு கிளி­நொச்­சிக்கு வாருங்­கள்! மைத்திரிக்கு சவால்…

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை, என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டி னார்.

ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரை­யா­வது எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் விடு­த­லை­செய்­து­விட்டு 18ஆம் திகதி கிளி­நொச்சி வந்­தாலே அரச தலை­வ­ரின் பய­ணம் சிறப்­பா­ன­தாக அமை­யும் என­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற தேசிய பாது­காப்பு நிதி­யம் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

உரி­மை­கள் மறுக்­கப்­பட்­ட­தா­லும் ஒடுக்­கப்­பட்­ட­தா­லுமே உரி­மை­கள் கோரி தமிழ் இளை­ஞர்­கள் போராட்­டம் நடத்­தி­னர். அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட இளை­ஞர்­கள் பலர் இன்­ன­மும் அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பில் ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் அரச தலை­வ­ரால் பல உறு­தி­மொ­ழி­கள் வழங்­கப்­பட்­டன.

ஒரே­யொரு கைதி மாத்­தி­ரமே விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார். தன்­னைக் கொலை செய்ய வந்­த­வரை விடு­வித்­து­விட்­ட­தாக அரச தலை­வர் அறி­வித்­தார்.

அதே­வேளை, பண வச­தி­யு­டைய அர­சி­யல் கைதி­கள் சிலர், சட்­டத்­த­ர­ணி­கள் மூலம் வழக்கை உடைத்து விடு­த­லை­யா­கி­யுள்­ள­னர்.

தமிழ் அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரின் பிள்­ளை­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போது, சித்­தி­ரைப் புது­வ­ரு­டத்­தில் உங்­கள் அப்பா உங்­க­ளு­டன் இருப்­பார் என்று அரச தலை­வர் மைத்­திரி கூறி­னார்.

புது­வ­ரு­ட­மும் முடிந்­து­விட்­டது. விடு­விப்பு இல்லை. அரச தலை­வர் கூறிய புது­வ­ரு­டம் எது­வென்று தெரி­ய­வில்லை?

தேசிய சிறு­வர் பாது­காப்­புத் தொடர்­பான நிகழ்­வில் கலந்­து­கொள்ள எதிர்­வ­ரும் 18ஆம் திகதி ஜனா­தி­பதி கிளி­நொச்­சிக்கு வருகை தர­வுள்­ளார். கிளி­நொச்­சி­யில் வாழும் ஆனந்த சுதா­க­ரின் பிள்­ளை­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­றி­விட்டு அரச தலை­வர் வந்­தால் சிறப்­பாக இருக்­கும் என்­றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top