News

சுழிபுரம் சிறுமி கொலை- சந்தேகநபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

”சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்தேன். தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்தேன்” என்று சுழிபுரம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என அறியமுடிகிறது.

சந்தேகநபர்களில் ஒருவர் ஒருவன் மனநோயாளியைப் போல நடிக்கிறார். சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் சரியான காரணத்தைக் கூறவில்லை என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி றெஜீனா நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் கீறல் காயங்கள் இருந்தமையால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டது.
தீவிர விசாரணைகளை நடத்திய பொலிஸார், சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரைக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை மேலும் இருவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதான சந்தேகநபர், கொலையை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். தான் மட்டுமே இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். மனநோயாளி போல தன்னை காட்டி, நடிக்கிறார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top