ஜெயலலிதா மரண விசாரணை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு விதமாக விசாரணை குழு தன் விசாரணையை தொடங்கியது. சமீபத்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்றை அப்போலோ மருத்துவர் சிவகுமார் ஆணையத்திடம் ஒப்படைத்தார்.
அதில் ஜெயலலிதா அவர்கள் தனது மூச்சு திணறல் பற்றியும் உடல்நிலை பற்றியும் மருத்துவரிடம் பேசியிருந்தார். அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்ட போது உடனிருந்த மருத்துவர் அர்ச்சனா , செவிலியர் ரேணுகா உட்பட 6 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது.
இவர்கள் அனைவரும் வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மருத்துவர் பிரசன்னா, மற்றொரு செவிலியர் ஷீலா ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதால் ஜெயலலிதாவின் மரண விசாரணை சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.