News

ஞானசாரருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி முடிவு?

சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பிக்குகள் பலரின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதியை சந்தித்த தேரர்கள் பலர் எடுத்துக் கூறியபோது, தான் இந்த நிலைமை குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top