News

டிராபிக் பொலிசாரிடம் எதேச்சையாக மாட்டிய தொடர் கொலையாளி: கண்டுபிடிக்கப்பட்ட பிணங்கள் !!!!

அமெரிக்கா இல்லினாய்ஸின் தலைநகரான ஸ்ப்ரிங்ஃபீல்டில் ட்ராஃபிக் பொலிசாரால் தடுத்து நிறுத்தபட்ட தொடர்கொலையாளி வீட்டில் மூன்று பிணங்கள் கண்டெடுக்கபட்டது. கடந்த ஞாயிறன்று காரின் பின் விளக்கு உடைந்திருந்ததால் ட்ராபிக் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காரில் இருந்த நபர் ஒரு தொடர் கொலையாளி என்று தெரிய வந்துள்ளது. ஸ்டீவர்ட் வெல்டன் என்பவரின் காரை பிங்க் விளக்கு உடைந்ததற்காக நிறுத்த சொன்ன போலீசார் அதன் பின்னும் நிற்காமல் சென்ற காரை துரத்தி சென்று பிடித்தனர்.

அப்போது காரின் உள்ளே கண்ட காட்சியில் அவர்கள் அதிர்ந்துதான் போனார்கள். காரின் உள்ளே இளம் பெண் ஒருவன் படு மோசமான காயங்களுடன் காணப்பட்டார். உடனடியாக வெல்டன் கைது செய்யப்பட்ட நிலையில் காயமடைந்த பெண் தன்னை வெல்டன் ஒரு மாதமாக சிறை பிடித்து வைத்திருப்பதாகவும், கொடூரமான சித்ரவதைகள் செய்ததோடு தன்னை பலாத்காரமும் செய்ததாக அவர் கூறினார்.

அவரது தாடை உடைந்திருந்தது, அவரது அடி வயிற்று காயங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை, முனை மழுங்கிய ஒரு பொருளால் அப் பெண் தொடர்ந்து தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ஊமை காயங்கள் மேலும் காலில் ஏற்பட்ட புண்ணிலிருந்து சீழ் வெளியேறி கொண்டிருந்தது இப்படிப்பட்ட மோசமான நிலைமையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் காவல்துறையினர்.

அதன் பின் காவல்துறையின் கவனிப்பில் வெல்டன் இருந்த நிலையில் கடந்த புதன் அன்று ஸ்ப்ரிங்பீல்டில் உள்ள வெல்டன் இல்லத்திலிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து அங்கு சென்றனர். அங்கே அவனது வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு உடல்கள் கிடைத்திருக்கின்றன, தொடர்ந்து வீடு முழுக்க சோதனையிட்டதில் அடுத்த நாள் வியாழக்கிழமை மேலும் ஒரு உடல் சிக்கியிருக்கிறது. அது மட்டுமின்றி 6 மாத குழந்தை ஒன்றும் காவல்துறையின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் உடல்கள் கிடைக்குமா என்று வெல்டன் வீட்டை போலீசார் சோதனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த விடயங்களை தொலைக்காட்சியின் மூலம் தெரிந்து கொண்ட வெல்டனின் அத்தை ஒருவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது மருமகன் இப்படிப்பட்டவனா என்று தான் அதிர்ந்து போயிருப்பதாக கூறினார். தனது குடும்பத்தார் அனைவரும் தொலைக்காட்சி மூலம் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவித்த தொடர் கொலையாளியின் அத்தை, அவனது வீட்டில் இருந்து கிடந்த சடலங்களை பற்றிய தகவல்களுக்காக காத்திருக்கிறார்.

தனது மருமகன் ஏற்கனவே மனநிலை பாதிப்பில் இருந்ததாக கூறும் அத்தை அதற்கான மருந்துகளை சரியாக வெல்டன் எடுத்து கொள்ளாததால் தான் திடீரென இப்படி வன்முறையாக நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார். காரில் இளம் பெண்ணை கடத்தி மோசமாக தாக்கி பாலியல் வன்முறை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள வெல்டன் மீது இன்னமும் அவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை கொன்றவர் அவர்தான் என்கிற ரீதியில் இன்னமும் பொலிஸார் வழக்கு பதியவில்லை.

இருப்பினும் வெல்டனின் பழைய வரலாறை தோண்டியெடுத்த போது சிறுவயதில் இருந்தே வெல்டன் பலரை இவ்வாறு கொடூரமான ஆயுதங்கள் சித்ரவதை செய்ததும், அதற்காக சிறை சென்று வந்ததும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. கடந்த புதன் கிழமை நிகழ்வோடு சேர்த்து வெல்டன் மேல் இது வரை 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் வெல்டனின் Massachusetts வீட்டில் மூன்று பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த பிணங்களின் வயதோ பாலினமோ எந்த தகவலும் போலீசாரிடம் இருந்து வரவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top