தமிழனுக்கு கனடா ஐ.நாவில் கிடைத்த கெளரவம்!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கனடா ஐ.நாவில் பாராட்டு கிடைத்துள்ளது. தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி என்ற இளைஞர், இளைஞர்கள் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவைக் கட்டமைக்கும் பணியில் அளித்த பங்களிப்பிற்காக கனடாவில் உள்ள ஐ.நா.அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்கும் பணியில், 2011-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வரும் தனக்கு கிடைத்துள்ள இந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சியும் கெளரவமும் தருவதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
சென்னை ஜல்லிக்கட்டு பேரவை செயலரான இவர், சென்னை புறநகர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக பல்வேறு அரசு மற்றும் அரசு சாரபில்லாத அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர், தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய டைரக்டர் ஜெனரல், நீதிபதி மோகன் குழந்தைகள் பல்கலைக்கழகத் துணைத் தலைவர், இந்திய தொழில் முனைவோர் கவுன்சில் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது