இந்தோனேஷியாவில் தனது தாயின் இறுதிச்சடங்கின்போது மகன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவப்பெட்டி வைப்பதற்கான தேர் தயார் செய்யப்பட்டு அதனுள் தாயின் சவப்பெட்டியை வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
தேர் சற்று உயரமாக இருந்த காரணத்தால் மூங்கில் தடியால் ஏறும் படிகள் செய்யப்பட்டு, 6 பேர் சேர்ந்து சவப்பெட்டியை தூக்கிகொண்டு அந்த படியில் ஏறியுள்ளனர். இதில், அந்த படி உடைந்து இவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர்.
மேலும், சவப்பெட்டியும் இவர்கள் மீது விழுந்துள்ளது. இதில், சவப்பெட்டி விழுந்து மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.