Canada

திடீர் சோதனையில் 75சந்தேக நபர்கள் 1.000குற்றச்சாட்டுக்கள்!

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அதிரடி திடீர் தாக்குதல் மூலம் 75பேர்கள்-ரொறொன்ரோ பகுதி வீதி கும்பல் உயர் அங்கத்தவர்கள் உட்பட- கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த கும்பல்“Five Point Generalz.”என அழைக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை காலை 800-ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் 53 தேடல் ஆணைகளுடன் குறிப்பிட்ட வீதி கும்பல்களை தேடியதன் விளைவாக 75பேர்களை கைது செய்ததுடன் 1,000ற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் போதை மருந்துகள், பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பெண்கள், இரு இளவயதினர் அடங்குகின்றனர்.அனைவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாவர். 78-துப்பாக்கிகள் கிட்டத்தட்ட 200,000டொலர்கள் மதிப்புள்ளவை. ஒரு இடத்தில் இருந்து 60-துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒற்றை பறிமுதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. கொக்கெயின், வென்ரநில், காவென்ரநில், ஹெரொயின் மற்றும் மரியுவானா-1.2மில்லியன் டொலர்கள் பெறுமதியானவை 184,000டொலர்கள் பணம்-சட்டவிரோதமாக பெறப்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக தொடர்புகளிற்காக உபயோகிக்கப்பட்ட 200-ற்கும் மேற்பட்ட டிஜிட்டல் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top