Business

நடுக்கடலில் தத்தளித்த 600 அகதிகளை மீட்ட கப்பலிற்கு நேர்ந்த அவலம்!!!!!

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 600 குடியேற்றவாசிகளை மீட்ட கப்பலொன்றிற்கு இத்தாலி அனுமதியளிக்க மறுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிற்கு தப்பிச்செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும்வேளை நடுக்கடலில் சிக்கிக்கொள்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்பொன்றின் கப்பலிற்கு இத்தாலியின் புதிய உள்துறை அமைச்சர் மட்டியோ சல்வினி அனுமதிவழங்க மறுத்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளும் அகதிகளும் இத்தாலிக்குள் வருவதை தடுக்கப்போவதாக தேர்தலில் பிரச்சாரம் செய்து வென்றவர் சல்வினி என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்களை காப்பாற்றுவது கடமை ஆனால் அதற்காக பாரிய அகதிமுகாமாக மாற்ற அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நீண்டகாலமாக இந்த விடயத்தில் தலையாட்டி பழகிவிட்டது தற்போது யாராவது இல்லை என தெரிவிப்பதற்கான தருணம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் உள்துறை அமைச்சர் லிபியாவிற்கு அருகில் உள்ள மோல்டா அகதிகளை உள்வாங்கவேண்டும் என கேட்டுள்ளார் எனினும் மோல்டா இதனை மறுத்துள்ளது.

அக்கியுரியஸ் என்ற கப்பல் 11 குழந்தைகள் ஏழு கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 629 குடியேற்றவாசிகளை நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை மீட்டுள்ளது.

கைக்குழந்தை உட்பட பல குடியேற்றவாசிகள் கப்பலிற்குள் காணப்படும் படத்தை குறிப்பிட்ட அரசசார்பற்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களில் 600,000 க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலிக்குள் படகு மூலமாகக் குடியேறிய நிலையில் சமீபகாலமாக அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆனால் அண்மைய நாட்களில் மீண்டும் அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் மீட்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top