நிகரகுவா அதிபருக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் – 11 பேர் உயிரிழப்பு!

மத்திய அமெரிக்கா நாடான நிகரகுவாவில் அதிபர் டேனியல் ஆர்டெகோவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் அதிபராக டெனியல் ஆர்டெகோ கடந்த 2007-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களில் அவ்வப்போது கலவரங்கள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், அதிபர் டெனியல் ஆர்டெகோக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.