நியு பவுன்லாந்தில் கோடை கால பனிவீழ்ச்சி!

சென்.ஜோன்’ஸ்-நியு பவுன்லாந். இது கோடை காலமாக இருக்கலாம்.ஆனால் நியு பவுன்லாந்தின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை பனி பொழிகின்றது. செவ்வாய்கிழமை காலை 5-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி பொழிந்துள்ளது. கோடை காலம் என நினைத்து பூ மரங்களை நட அனைத்தும் பனிக்குள் புதைந்து விட்டன.
யூன் 26 நியு பவுன்லாந்தில் ஒரு பனிபொழிவு சாதனை படைத்துள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது. மாகாணத்தின் போக்குவரத்து திணைக்களம் வீதிகள் பனியால் மூடப்பட்டிருப்பதால் கவனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு குடியிருப்பாளர்களை எச்சரிக்கின்றது.