Canada

நிர்வாணமாக மீட்கப்பட்ட காதலி: நெஞ்சை பதறவைக்கும் கொடூர கொலை …

உக்ரைன் காதலியை மிக கொடூரமாக கொன்ற வழக்கில் கனடா பிரபலமான Blake Leibelக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த தொழிலதிபரின் மகனும், Comic புத்தக வடிவமைப்பாளரும் ஆனவர் Blake Leibel. இவரது காதலி Iana Kasian, கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.

சில வாரங்களுக்கு முன்னரே அழகான பெண் குழந்தையை பெற்ற நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலிலிருந்து ரத்தம் முழுவதும் உறிஞ்சி எடுக்கப்பட்டு தலையின் மேற்பகுதி உடைக்கப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார்.

இவரது உடலை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில், Blake Leibel-வை கைது செய்தனர். இவர் எழுதிய நாவலை தழுவியே இக்கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பரோலில் வெளியே வரமுடியாதபடி ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனை கேட்டதும் Kasian-ன் தாய் கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களையும் குளமாக்கியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top