News

நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்!!

திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில், இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கத்திய இளைஞனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை தோன்றியுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நீதிமன்றத்திற்கு வெளியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து என கூச்சலிட்டுள்ளார்.

ad
வித்தியாவின் வழக்கு தொடர்பில் விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியனின் உயிருக்கு ஆபத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர் கூக்குரலிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதிமன்ற பொலிஸார் குறித்த இளைஞனை நீதிமன்ற வளாகத்தில் உள்ள முனியப்பர் கோவிலுக்கு முன்பாக அமர வைத்துள்ளதுடன் விசாரணை செய்தனர்.

இதன்போது அந்த இளைஞன் புத்திசுவாதீனமற்றவர் என தெரியவந்துள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற பொலிஸார் மேற்கொண்டதுடன், அதன் பிறகு துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top