Canada

பயங்கர மோதலை தொடர்ந்து கார் கடத்தல், பேரூந்து கடத்தல் முயற்சி!

ரொறொன்ரோ-பிரம்ரனில் இடம்பெற்ற அதிகாலை மோதலில் மனிதன் ஒருவர் கொல்லப்பட்டார்.இந்த மோதல், கார் ஒன்றை கடத்துவதற்கும் பேரூந்து ஒன்றை கடத்த முயன்றதற்கும் கூட முயன்ற சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.

இந்த மூன்று-வாகன தொடர் மோதல் பிரம்ரன் மக்லாஹ்லின் வீதி மற்றும் Steeles அவெனியுவிற்கு அருகில் அதிகாலை 1-மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் கார் ஒன்றை கடத்திக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட கார் தான் பின்னர் மோதலில் ஈடுபட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

கிட்டத்தட்ட 20நிமிடங்களின் பின்னர் குறிப்பிட்ட வாகனம் ரொறொன்ரோ, கிப்லிங் மற்றும் Steeles அவெனியுவில் பாதசாரி ஒருவரை அடித்து விட்டதாக கூறப்படுகின்றது. பாதசாரி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டார்.

தாக்கிய வாகனம் தரிக்காது சென்று விட்டது. சிறிது நேரத்தில் வெஸ்ரன் வீதி மற்றும் Steeles Avenue-வில் பல வாகன மோதலிலும் சம்பந்தப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து வெளியேறிய சந்தேக நபர் ரிரிசி பேரூந்து ஒன்றை திருட முயன்றுள்ளான்.

எனினும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். சந்தேக நபரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசாரல் கூறப்பட்டுள்ளது..

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top