பற்றி எரியும் கால்பந்தாட்ட மைதானம்! ஐஎஸ் வெளியிட்ட எச்சரிக்கை ……

ரஷ்யாவில் கால்பந்தாட்ட மைதானம் குண்டுவெடிப்பில் பற்றி எரிவது போன்ற வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வருகிறது. உலகமே உற்றிநோக்கியுள்ள இப்போட்டிகளுக்கு தொடக்கத்தில் இருந்து ஐஎஸ் இயக்கம் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது.
மெஸ்ஸியின் தலையை துண்டிப்பது, கால்பந்தாட்ட மைதானத்தில் ரத்த ஆறு ஓடும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கள் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் குண்டுவெடிப்பில் மைதானம் தீப்பிடித்து எரிவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம், எங்களிடம் ஆளில்லா விமானங்கள் உள்ளது, சரியான இடத்தை தெரிவு செய்து தாக்குவோம் என எச்சரிக்கை செய்தியும் விடப்பட்டுள்ளது.