Canada

பாரிய நெடுஞ்சாலையில் கொடிய விபத்து!

ரொறொன்ரோ- அவெனியு வீதிக்கு அருகில் நெடுஞ்சாலை 401-ல் கட்டுமான பணி இடம்பெற்ற பகுதியை அண்டிய பாதையில் நிறுத்தப்பட்டிருந்த அகழ்பொறி ஒன்றின் பின்புறமாக பெண்சாரதி ஒருவர் செலுத்தி வந்த வாகனம் மோதியுள்ளது. வாகனத்தின் சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டார்.

செவ்வாய்கிழமை காலை எட்டு மணிக்கு சிறிது முன்பாக சம்பவம் நடந்துள்ளது. சில காரணங்களால் குறிப்பிட்ட வாகனம் கட்டுமான பணி பகுதிக்குள் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழ் பொறியின் பின்புறமாக மோதியதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன் கெறி சிமித் கூறியுள்ளார்.

பெண் சாரதி சிகிச்சைக்காக படுகாயமடைந்தோர் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிராபத்தானவை என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top