பாரிய நெடுஞ்சாலையில் வழுக்கல் குழப்பம்!

ரொறொன்ரோவின் பிசியான நெடுஞ்சாலை 401-மேற்கு வீதியில் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்காபுரோவில் மெடொவில் வீதிக்கு அருகில் தயிர் சுமந்து வந்த டிரக் ஒன்று விபத்துக்குள்ளாகியதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தலைக்கு மேலாக இருந்த சைகை ஒன்றின் ஆதரவு உத்தரத்துடன் டிரக் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மோதிய வேகத்தில் டிரெயிலர் பிளந்து திறந்ததால் தயிர் கொள்கலன்கள் வீதி பூராகவும் சிந்திவிட்டன.
வீதியில் சிந்திய தயிரை அகற்றும் பணி இடம்பெற்றதென ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி கெரி சிமித் தெரிவித்தார். தயிர் நெடுஞ்சாலை பூராகவும் சிந்தியதால் அவற்றை கூட்டி அகற்றி மணல் தூவ வேண்டும் எனவும் தயிர் ஒரு மென்மையானதாகையால் நெடுஞ்சாலையை பாதுகாப்பானதாக செய்தல் அவசியம் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கவனயீனமாக வாகனம் செலுத்தியதாக 25-வயதுடைய வாகன சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டது. சாலை மிக வழுக்கல் தன்மையாக இருப்பதால் மதியத்திற்கு முன்னர் திறக்கப்படமாட்டாதெனவும் கூறப்பட்டது.