பாரீஸ் பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்து: ஏழு பேர் காயம் …

நேற்று பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு நேரிட்டதால், பாரீஸ் புற நகர் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் கவிழ்ந்ததில் ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மழை காரணமாக ரயில் பாதையை தாங்கி நின்ற மண் மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்டதால், பாரீஸ் நோக்கி சென்ற புற நகர் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
அது அந்த தடத்தில் முதல் ரயிலானதால், ரயிலில் கொஞ்சம் பேர் மாத்திரமே இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக Gif-sur-Yvetteஇன் மேயரான Michek Bournet தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் ஒரு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும், ஏனென்றால் ஏராளமான மாணவர்கள் ரயிலில் செல்லும் நேரம் அது என்று அவர் கூறினார்.
ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் மரம் விழுந்துள்ளதாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் வந்ததால் அவர் ரயிலை வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் ஓட்டி வந்தார். என்றாலும் இருட்டாக இருந்ததால் தண்டவாளத்தை தாங்கி நின்ற மண் அடித்துச் செல்லப்பட்டதை ஓட்டுநர் பார்க்கவில்லை.