News

பிணை முறி விசாரணைகளை நிறுத்த அழுத்தம் கொடுக்கும் மைத்திரி – ரணில் – மகிந்த தரப்புகள்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமான விசாரணை நடத்தும் விசாரணைப் பிரிவுகளுக்கு விசாரணைகளை மூடிமறைக்குமாறு மூன்று தரப்பு அழுத்தங்களை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஜைகள் சக்தி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தரப்பினர், பிரதமரின் தரப்பினர், ராஜபக்ச தரப்பினர் ஆகிய மூன்று தரப்பினர் விசாரணைகளை நடத்தவிடாமல் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மருதானையில் பிரஜைகள் சக்தி அமைப்பு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். விசாரணைகளை முடக்குமாறு அச்சுறுத்தல் விடுக்கின்றனராம். அழுது புலம்புகின்றனராம். அப்படியானால், இந்த மூன்று தரப்பினரும் முகமூடிகளை அணிந்துக்கொண்டு ஒரே நாடகத்தை ஆடி வருகின்றனர். உண்மையை வெளியிடுமாறு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பேராசிரியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top