பிரான்சில் சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்திய பெண்: தீவிரவாத தாக்குதலா?

பிரான்சில் சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் ஒருவர் வாடிக்கையாளர்களை கத்தியால் தாக்கியதால் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென்கிழுக்கு பகுதியின் La Seyne-sur-Mer-ல் அமைந்திருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு புகுந்த 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை கத்தியால் தாக்கியுள்ளார். தாக்கிய போது அவர் அல்லாஹு அக்பர் என்று கத்தியபடியே தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அதன் பின் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு தீவிரவாத தாக்குதல் இல்லை எனவும் கூறியுள்ளனர்.