பிரித்தானியாவில் கத்தியுடன் அலையும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள்!!!

பிரித்தானியாவில் போதை மருந்து கும்பல்களுக்காக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கத்தியுடன் அலைவதாக பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் ஆண்டுக்கு சுமார் 1.8 பில்லியன் பவுண்ட் அளவுக்கு போதை மருந்து வியாபாரம் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள கும்பல்கள் 11 வயது சிறுவர்களை தங்களின் அடிமை சேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த சிறுவர்களின் முக்கிய பணி என்பது போதை மருந்து பொட்டலங்களை குறிப்பிட்ட பகுதிக்கு சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் எதிரணியினர் இந்த பொட்டலங்களை பறிக்காமல் இருக்க குறித்த சிறுவர்களிடம் ஆயுதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதல் சம்பவங்களே பிரித்தானியாவில் அதிக வன்முறைக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, அவர்கள் குறிப்பிடும் பகுதிக்கு இந்த சிறுவர்களே போதை மருந்து பொட்டலங்களை சேர்ப்பிக்கின்றனர். தேசிய குற்றவியல் முகமையின் ஆய்வுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் சுமார் 1000 குழுக்கள் தங்கள் ரகசிய சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஹாட்லைன் சேவையும் நாள் ஒன்றுக்கு 5,000 பவுண்ட் தொகையை சம்பாதிக்கின்றனர். போதை மருந்து கும்பல்களால் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள், பாலியல் வன்முறைக்கும் உள்ளாவதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி போதை மருந்து கும்பல்களே சிறுவர்களை பாலியல் தொழிலுக்கும் ஈடுபடுத்துகின்றனர்.
பெரும்பாலும் மத்தியதர மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதி சிறுவர்களே போதை மருந்து கும்பல்களிடம் அதிகம் சிக்குவதாக கூறப்படுகிறது. அதிக ஊதியம், கண்கவரும் வாழ்க்கை முறை, நட்பு வட்டம், சமூகத்தில் மரியாதை என ஆசை வார்த்தை கூறி சிறுவர்களை சிக்க வைக்கின்றனர். ஆனால் சிறுவர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு என கூறப்படுகிறது.