Canada

புரியாத சின்ன விடயத்தால் கனடா நாட்டவருக்கு ஏற்படும் பெரிய நஷ்டம் !!

உணவுப் பொருள் பாக்கெட்டின்மீது ஒட்டப்பட்டுள்ள ”இந்த திகதிக்குமுன் பயன்படுத்தவும் என்ற லேபிளிலுள்ள வாசகத்தின் பொருள் தெரியாததால் கனடா நாட்டவர்கள் அதிக உணவை வீணாக்குவதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உணவை வீணாக்குவதை குறைக்கும் நோக்கில் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று “இந்த திகதிக்குமுன் பயன்படுத்தவும்” என்று போடப்பட்டிருக்கும் திகதி தாண்டிவிட்டால் அந்தப் பொருளை தூர வீசிவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளது.

இத்தகைய லேபில்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்தி கனடாவில் உணவு வீணாவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக The National Zero Waste Council தெரிவித்துள்ளது. மக்களுக்கு அவற்றின் பொருள் புரியவில்லை என்கிறார் இந்த ஆய்வறிக்கையை எழுத உதவிய Denise Philippe. “இந்த திகதிக்குமுன் பயன்படுத்தவும்” என்று போடப்பட்டிருக்கும் லேபிளைக் காண்பவர்கள், அந்த திகதிக்குப் பின் அதை பயன்படுத்தக்கூடாது என்று எண்ணி விடுகின்றனர்.

அப்படி அதை சாப்பிட்டால் அதனால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அவர்கள் நினைக்கிறார்கள், அது தவறு என்கிறார் அவர். உலகிலேயே உணவை அதிகம் வீணாக்குபவர்கள் கனடா நாட்டவர்கள்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்று ஒவ்வொரு கனடா நாட்டவரும் ஆண்டொன்றிற்கு 400 கிலோ உணவை வீணாக்குவதாகத் தெரிவிக்கிறது.

வீணாகும் உணவில் 47 சதவிகிதம் வீடுகளில்தான் வீணாகிறது. முட்டை போன்ற சில பொருட்கள் தவிர மீதி உணவுப் பொருட்களைப் பொருத்தவரையில் “இந்த திகதிக்குமுன் பயன்படுத்தவும்” என்று போடப்பட்டிருக்கும் லேபிள் உணவின் தரத்தைத்தான் குறிக்கின்றதேயன்றி அதற்குப் பின் அதை உண்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று பொருள் இல்லை.

உணவை வீணாக்குவதைத் தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு பிரச்சாரத்தையே மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ள Denise Philippe, மக்கள் சரியாக புரிந்து கொண்டு உணவை வீணாக்குவதைத் தவிர்ப்பதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top