அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க திட்டமிடுள்ள விடயம் உலக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஐரோப்பிய பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துளனர். இந்த சந்திப்பு NATO உச்சி மாநாட்டிற்கு முன்னரோ அல்லது டிரம்பின் பிரித்தானிய பயணத்தின்போதோ நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் வியன்னாவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
>இச்செய்தி அமெரிக்க அதிபர் டிரம்பின் NATO மீதான அர்ப்பணிப்பு குறித்தும் அவரது பிரித்தானிய பயணம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் பிரித்தானிய ராணுவத்தின் தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களில் முக்கியமானவருமான ஜெனரல் Mark Carleton-Smith, ரஷ்யா போருக்காக தனது படைகளை திரட்டி வருவதாக எச்சரித்துள்ளார். சமீபத்தில் பிரித்தானியாவின் சாலிஸ்பரியில் ரஷ்ய முன்னாள் உளவாளிகள் நச்சுப்பொருளால் தாக்கப்பட்டதை மேற்கோள் காட்டி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.