Canada

மன அழுத்தம் போக்கும் தண்ணீர் கனடாவில் அறிமுகமாகிறது..

கனடா நிறுவனம் மன அழுத்தத்தை போக்கும் தண்ணீரை அறிமுகம் செய்துள்ளது.கனடா வான்கூவரில் கடந்த வாரம் கார் பிரீ டே என்ற கண்காட்சி நடைபெற்றது. இதில் பல நிறுவனங்கள் கலந்து தங்கள் புதிய பொருள்களை அவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தினர். அதில் ஹாட் டாக் பில்டர் உள்ள தண்ணீர் பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

தண்ணீர் பாட்டிலில் ஹாட் டாக் பில்டர் போட்டால் மூளை புத்துணர்வு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என விளம்பரம் செய்யப்பட்டது.இதனால் பலர் இந்த பாட்டிலை ஆர்வமாக வாங்கினர். இந்த நிறுவனத்தின் அதிகாரியான டக்ளஸ் பென்ஸ் கூறுகையில், வேலைப்பளு காரணமாக பலர் மன சோர்வு அடைகின்றனர். இதனால் உடல் எடை கூடுகிறது. இதற்கான தீர்வாக இந்த ஹாட் டாக் வாட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீரை பருகும்போது உடல் எடை குறையும், மன அழுத்தம் சீராகும், மூளை செயல்திறன் கூடும், வாழ்நாள் அதிகமாகும், இளமை நிலைக்கும் என்று கூறுகிறார் அதன் நிறுவனர். இந்த கருத்து உண்மையானதா என்பதனை ஆராய்கின்றனர்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top