News

மன வளர்ச்சி குன்றியவரை 100 முறை குத்திக் கொன்ற இளைஞன்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு மன நலம் குன்றியவரின் உடல் Dublinஇல் உள்ள பூங்கா ஒன்றில் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் வந்து பார்த்தபோது அந்த நபரின் உடலில் 100 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Adam Muldoon (23) என்னும் அந்த நபர் வீடின்றி வழியருகில் வசிக்கும் ஒரு நபராவார். அவர் அந்த பூங்காவில் சில இளைஞர்களுடன் தங்குவதும் அங்கேயே தூங்குவதும் வழக்கம்.. அவரது தொண்டை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட மற்றும் கீறப்பட்ட காயங்கள் காணப்பட்டன.

இதற்கிடையில் 17 வயது இளைஞன் ஒருவன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் சரணடைந்துள்ளான். பொலிசார் அந்த இளைஞனை விசாரித்து வருகின்றனர். கொலை செய்ததாக கருதப்படும் அந்த இளைஞன் மது மற்றும் போதைப் பழக்கம் உடையவன் என தெரிய வந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top