News

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது? – ஜனாதிபதி பிரதமர் பேச்சு

“மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து ஜனாதிபதியுடனும், கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி விரைவில் அதுபற்றி அறிவிப்பேன்.”
– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் இடத்திலான கேள்விநேரத்தில்,
“பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளில் எட்டு மாதங்களுக்கு மேலாக ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது. தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லையென தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது விடுக்கப்படும்” என்று தினேஷ் குணவர்தன எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்ட தகவலை வெளியிட்டார் பிரதமர்.
“தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். ஒரேநேரத்தில் தேர்தலை நடத்துவதுதான் எமது விருப்பமாக இருக்கின்றது. எப்படியிருப்பினும், ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது பேசவுள்ளேன். அதன்பின்னர் முடிவொன்றுக்கு வரலாம்” என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
கிழக்கு உட்பட மூன்று மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top