News

முதல்வர் விக்கிக்கு எதிராக திரும்பிய நீதிமன்ற தீர்ப்பு: அமைச்சரவையில் திடீர் மாற்றம்! பரபரப்பில் யாழ் அரசியல் களம்!!

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை முதல்வர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார்.இந்நிலையில் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு

நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது, முதல்வர் விக்கினேஸ்வரன் வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை

பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீர்ப்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்படவுள்ளது.இந்நிலையில் விரைவில் வடமாகண அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என செய்திகள்

தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்குள் டெனீஸ்வரன் வெற்றிபெற்றிருந்தாலும், அரசியல்ரீதியாக மாகாணசபையின் அதிகாரமற்ற தன்மையை தீர்ப்பு புலப்படுத்துகிறது.மாகாண முதலமைச்சர்களிற்கும்,

ஆளுனரிற்குமிடையிலுள்ள அதிகார பேதத்தை இந்த தீர்ப்பு துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மாகாணசபை முறைமையின் பலவீனம் தொடர்பான உரையாடல்களை மீளவும் ஏற்படுத்த இந்த தீர்ப்பு சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top