முற்றாக மறுக்கிறார் சுமந்திரன்.

தன்னை கொலை செய்ய முன்னாள் போராளிகள் முயற்சித்து வருவதாக வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.
சுமந்திரனை கொலை செய்யும் நோக்கில் ஒட்டுசுட்டானில் கிளைமோர் தயார் படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனை முற்றாக மறுக்கும் சுமந்திரன் அவ்வாறு எனக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை. தன்னை இலக்கு வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இலக்கு வைத்து முன்னாள் போராளிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் தகவல் வழங்கி 4 நாள்களில் கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.