முல்லைத்தீவில் காணாமல்போனோர் அலுவலக அமர்விற்கு எதிர்ப்பு பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை புறக்கணித்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல்போனோர் அலுவலகம் இன்று தனது நடவடிக்கைகளை முல்லைத்தீவில் மேற்கொண்டு வரும் நிலையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இன்று முல்லைத்தீவில் காணாமல் போனோரின் குடும்பத்தவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துவருகின்றது.
இந்த அலுவலகம் ஒரு கண்துடைப்பு என குற்றம்சாட்டியுள்ளனர் எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் இதனை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஜெனிவா தீர்மானத்திற்கு இவ்வலுவலகம் எதிரானது எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட கிழக்கு பகுதிகளில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.