News

மேயர் வேட்பாளர் கொலை: பணியில் இருந்த பொலிஸார் அனைவரும் கைது!

மெக்ஸிகோவில் மேயர் வேட்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மெக்ஸிகோவில் மேயர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிட்ட Fernando Angeles Juarez கடந்த வியாழக்கிழமையன்று, ஹோட்டலுக்கு வெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

64 வயதான Fernando நீண்ட நாட்களாகவே ஊழல் மற்றும் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வந்த நிலையில், அவரது இறப்பிற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்நாட்டு அரசின் அதிரடி நடவடிக்கையாக, சம்பவம் நிகழ்ந்தபொழுது பணியில் ஈடுபட்டிருந்த 27 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது style=”font- இவர்களுடன் சேர்த்து, அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரபல தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக பணியாற்றும் ஒருவரையும் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட காவலர்கள் அனைவரின் கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்ட நிலையில், குப்புற படுக்க வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று அனைத்து ஊடங்கங்களிலும் வெளியாகி வருகிறது.<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top