News

யாழ். சிறுமி கொலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த நபரை 7ஆம் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவகுமார் சதீஸ்குமார் என்பவருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில்,

தோடுகளைத் திருடுவதற்காகவே சிறுமியை கொலை செய்ததாகவும், தான் மட்டுமே இந்தக் கொலையை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், புறா காட்டுவதாக ஆசை வார்த்தை காட்டி மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று, துன்புறுத்தி சிறுமி மயக்கமடைந்ததும் தோட்டை எடுத்து விட்டு, மாடுகள் கட்டும் கயிற்றால் சிறுமியின் கழுத்தை நெரித்து உடலை கிணற்றுக்குள் வீசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். சுழிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு வந்த சிறுமி சிவனேஸ்வரன் றெஜினா காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நேற்றைய தினமே பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top