“மாணவர் எழுச்சி நாள்” அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நேற்று (06) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது
உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அணுசரனையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில் தமிழினத்தின் விடுதலைக்காக முதல் தற்காெடையாளர் தியாகி பாென்னுத்துரை சிவகுமாரனுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
“மாணவர் எழுச்சி நாள்” ஆனது ஜூன் 6 ஆம் நாள் தியாகி சிவகுமாரன் நினைவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.