யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு 37 வருட நினைவு தினம்!

ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இந்த இனவழிப்பை நினைவு கொள்ளும் பொருட்டு இன்று நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதே போன்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலமையிலும் நூலக எரிப்பு நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.