India

யே! அவமானப்பட்ட கோபத்தில் கத்திய ரஜினி- வைரலாகும் வீடியோ !

தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் சற்று ஆவேசத்துடன் பேட்டியளித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்த பலரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றார் ரஜினி.

அப்போது இளைஞர் ஒருவர் யார் நீங்க? என கேட்டதால் கோபமானார், முகத்தை இறுக்கத்துடன் வைத்திருந்த ரஜினி சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் சற்று கோபத்துடனேயே பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தூத்துக்குடி சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் எனவும் தெரிவித்தார், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று சமூக விரோதிகள் பொலிசாரை தாக்கியதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதும் அவர்களே என தெரிவித்தார்.

மேலும் மக்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என தெரிவித்தார். அப்போது பொலிசை ஆதரித்து பேசுகிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கேட்க, ”யே வேற யாராவது கேள்வி இருக்கா” என ஏக வசனத்தில் முகத்தை கோரமாக வைத்துக் கொண்டு என கோபமாக கிளம்பி சென்றுவிட்டார்.

இந்த பேட்டியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு கருத்துகளை பகிரத் தொடங்கினர். சில மணிநேரங்களிலேயே இந்திய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top