யோர்க் பல்லைக்கழக 15-வார வேலைநிறுத்தம் முடிவிற்கு வருமா?

ரொறொன்ரோ-யோர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 1,000-ற்கும் மேற்பட்ட ஒப்பந்த துறையை சேர்ந்த ஆசிரியர்கள் 15-வார வேலை நிறுத்தத்தில் இருந்து இன்று வேலைக்கு திரும்புகின்றனர்.ஆனால் வகுப்புக்கள் எப்போது ஆரம்பமாகும் என்பது தெளிவற்ற நிலையில் இருப்பதாக அறியப்படுகின்றது.
CUPE 3903 யுனிட்-2 அங்கத்தவர்கள் கடந்த வாரம் பாடசாலை அறிவித்த சலுகையை ஏற்று இன்று காலை வேலைக்கு திரும்புவர் எனவும் ஆனால் கிட்டத்தட்ட 2,000 கற்பித்தல் மற்றும் பட்டதாரி உதவியாளர்கள்- மற்றைய இரு பேரம் பேசும் அலகுகளை சேர்ந்தவர்களிற்கான வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அலகுகளும் சலுகை குறித்த வாக்கெடுப்பபை ஏற்று கொள்ளவில்லை. வேலை நிறுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்கள் மட்டுமே. CUPE 3903 அங்கத்தவர்கள் மார்ச் 5ல் வெளிநடப்பு செய்தனர்.