India

ரஜினியை பார்த்து யார் நீங்க என கேட்டவர் சரத்குமாரை பார்த்து கேட்காதது ஏன்?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்த நிலையில் அவரை பார்த்து நீங்கள் யார் என இளைஞர் கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவர் மத்தியிலும் பகிரப்பட்டு வந்தது. அந்த வீடியோவில், ரஜினியை பார்த்து யார் நீங்க? என கேட்டார், அதற்கு ரஜினியோ, நான் ரஜினிகாந்த் என்று கூறினார்.

ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்? என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், `நான் சென்னையிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அந்த இளைஞர், நான் ரஜினியை பார்த்து கேட்ட கேள்வியை, சரத்குமார் சாரை பார்த்து கேட்கவில்லை. ஏனெனில் நாங்கள் நூறு நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஒருநாள் அவர் எங்களுடன் வந்து கலந்துகொண்டார். மேலும், நாங்கள் குடிக்கும் தண்ணீரையும் குடித்து எங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார் என கூறியுள்ளார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top