ரொறொன்ரோவில் தொடரும் வெப்ப எச்சரிக்கை!

ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் தொடரந்து இரண்டாவது நாளாக வெப்ப எச்சரிக்கையின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளது. இன்றய வெப்பநிலை ஈரப்பதனுடன் கூடி 40ஐ அண்மித்து உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6மணியளவில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 25 C என தெரிவித்த சுற்றுசூழல் கனடா இந்நிலை இன்றய நாளின் பிற்பகுதியில் மிகவும் வெப்பமடையும் எனவும் 31C ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.
வானில் சூரிய ஒளி காணப்படும் என தெரிவித்துள்ள போதிலும் பிற்பகலில் மழைத்தூறலிற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாகவும் இவர்களின் முன் கணிப்பு கூறுகின்றது. சனிக்கிழமை முதலில் அறிவிக்கப்பட்ட வெப்ப எச்சரிக்கை மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இதே நேரம் குளிரான வெப்பநிலை வெகு தூரத்தில் இல்லை. இன்று இரவு ஒன்ராறியோவின் தென்பகுதியை குளிரான காற்று கடந்து செல்லுமாகையால் கடந்த சில நாட்களாக காணப்பட்ட வெப்ப நிகழ்வு முடிவிற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.