Canada

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு விற்பனை நிலைமை?

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் கடந்த வருடம் இதே காலப்பகுதியின் வீட்டு விற்பனை விகிதாசாரத்துடன் இந்த ஆண்டு மே மாதத்தின் நிலைமையை ஒப்பிடுகையில் 22.2சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொறொன்ரோ ரியல் எஸ்டேட் வாரியம் தெரிவிக்கின்றது.

சகல வகையான வீடுகளுடன் ஒப்பிடுகையில் சராசரி விற்கும் விலை 6.6சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இது டொலர்கள் 805, 320 ஆகும் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் பருவகால ரீதியாக சரிசெய்யப்பட்ட அடிப்படையில் ஒப்பிட்டு பாரக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் சராசரி விற்பனை விலை 1.1சத விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரொறொன்ரோ நகரில் சகல பாரிய வகை வகை வீடுகளின் விலை உதாரணமாக சராசரி விற்பனை விலை அல்லது சிறிது அதிகரித்தும் உள்ளதாகவும் கருதப்படுகின்றது. வீட்டு விற்பனை சந்தையை குளிர்விக்க ஒரு புதிய தொகுப்பை ஒன்ராறியோ அரசாங்கம் கொண்டு வருவதற்கு முன்னர் ரொறொன்ரோ பகுதி சந்தை கடந்த ஏப்ரல் உச்ச நிலையில் இருந்திருக்கலாம் என பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top