ரொறொன்ரோ வான் தாக்குதலிற்கு வண்ணமய அஞ்சலி!

ரொறொன்ரோ-இந்த வருட ஆரம்பத்தில் நகரில் இடம்பெற்ற கொடூரமான வான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உதவும் பொருட்டு உள் ஊர் கலை அமைப்பு ஓன்று ஒரு நிறுவலை ஆரம்பித்துள்ளது.
சிவிக் சென்ரர் அருகில் யங் வீதி நீட்டிலும் நடைபாதை ஒன்றில்-வாடகை வான் ஒன்று ஓடிச்சென்று பாதசாரிகள் வழியில் சென்று கொண்டிருந்த 10பேர்களை கொன்ற வழியில் நோர்த் யோர்க் ஆர்ட்ஸ் வண்ண மயமான பதாதைகளை தொங்கவிட்டிருந்தது.
‘நம்பிக்கை அமைதி அன்பு,’ ஆகியவற்றின் செய்திகளை பாதாதைகள் தாங்கி நின்றன. இந்த நிறுவல்கள் செப்ரம்பர் 8 வரை காணப்படும் என அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். சமுதாயத்திற்கு ஒரு ஊக்கத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தாக்குதலின் வெறுப்பு மற்றும் துயரத்தை எதிர் கொள்வதாகவும் அமையும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23 தாக்குதலில் எட்டு பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதுடன் 16-பேர்கள் வரை காயமடைந்தனர். 25-வயதுடைய அலெக் மினசியான் என்பவர் இச்சம்வம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இறந்தவர்கள் 22வயது முதல் 94வயது வரையிலானவர்கள் இவர்களில் தென் கொரியாவை சேர்ந்த மாணவன் ஒருவரும் ஜோடானை சேர்ந்த மனிதர் ஒருவரும் அடங்கினர்.