News

லண்டனில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்! உயிருக்கு போராடும் நபர்கள் !!

லண்டனில் ஒரே நாளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதால் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி குத்து சம்பவம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை கத்தி குத்து மற்றும் துப்பாக்கி சூட்டின் காரணமாக 67 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் லண்டனின் peckham பகுதியில் மர்மநபர் ஒருவர் இன்னொரு நபரின் முகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அதாவது உள்ளூர் நேரப்படி 6.48 மணியளவில் Greenwich பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்தி குத்து சம்பவத்தால், தாக்குதலுக்குள்ளான நபர் இரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது இவர்கள் இருவரின் நிலைமையும் மோசமாக உள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் பொலிசார் இது குறித்து எந்தஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top