லண்டனில் இளைஞர்களின் வெறிச்செயலில், 4 மணி நேரத்தில் 9 கொள்ளை – வாள்வெட்டுக்கு 4 பேர் பலி, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 மணி நேரத்தில் நடந்த 9 கொள்ளைச் சம்பவத்தில் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த 4 கொலை மற்றும் 9 கொள்ளைச் சம்பவங்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இருவரே நடத்தியதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் அப்துல் சமத் என்ற 28 வயது இளைனரின் மொபைலுக்காக அவரை குறித்த கும்பல் கொன்றுள்ளது.
கொலை செய்வதற்கு முன்னர் அவரது வங்கி பின் எண்ணை கேட்டு சித்திரவதை செய்துள்ளது. கொல்லப்பட்ட அப்துல் சமத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவரது இழப்பு, குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் 4 மணி நேரத்தில் மேற்கு லண்டனில் 9 கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 பேரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் இந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்பியுள்ளனர். பல மணி நேர தீவிர தேடுதல் வேட்டையில் குறித்த இளைஞர்கள் இருவரும் பொலிசில் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து விலைமதிப்பற்ற பல பொருட்களை பொலிசார் அப்போது கைப்பற்றினர். இந்த வழக்கில் Nathan Gilmaney(19) கொள்ளையிட்டதை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார், ஆனால் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். Troy Thomas(18) கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது