லண்டனில் டெலிவரி டிரைவர் கொடூர முறையில் குத்தி கொலை!!

லண்டனில் டெலிவரி டிரைவர் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Chelsea பகுதியின் Cathcart சாலையில் உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க டெலிவரி டிரைவர் வந்து கொண்டிருந்த போது, மர்ம கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
இதில் அவருக்கும் பல இடங்களில் கத்தி குத்து இருந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இது குறித்து அந்த தெருவில் இருக்கும் சீரியல் நடிகை Mika Simmons, தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஒரு கருப்பு நிற இளைஞர் தான் அவரை பல முறை குத்தி கொலை செய்தததாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், டெலி டிரைவர் பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாக, இளைஞர்கள் சிலர் குத்தி கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால் பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், உறுதியான தகவலுக்கு பின்னரே எதையும் சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
லண்டனில் கடந்த வாரம் மட்டும் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது இவரும் இறந்திருப்பதால், இந்தாண்டு மட்டும் லண்டனில் கத்தியால் கொலை செய்யப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயரந்துள்ளது. தற்போது வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.