Business

லண்டனில் 16 வயது மாணவனை கத்தியால் பல முறை குத்திய மர்மநபர்கள், காப்பாற்ற போராடிய பள்ளி மாணவி !

லண்டனில் இரண்டு பேர் 16 வயது மாணவனை கத்தியால் தாக்கியதால், அந்த மாணவனை காப்பாற்றுவதற்கு பள்ளி மாணவி போரடியுள்ளார். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Streatham Hill நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் 16 வயது மாணவனை, மர்மநபர்கள் இரண்டு பேர் கத்தியால் பல முறை குத்தியுள்ளனர்.

இதனால் அவர்களிடமிருந்த தப்பிக்க அந்த மாணவன் போரடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு நபர் மற்றும் பள்ளி மாணவி ஒருவர் ஓடி வந்து மாணவனை அவர்களிடமிருந்த காப்பாற்ற போராடுகின்றனர். இதில் அந்த மாணவன் மாணவிக்கு நண்பன் என்பதால், கத்தியால் குத்தியவர்களிடம் மாணவி சண்டை போட்டு விரட்டுகிறார். அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்த சுவற்றின் வழியே தப்பி ஓடியுள்ளனர்.

மர்மநபர்கள் கண்மூடித்தனமாக குத்தியதால், குறித்த மாணவன் இரத்த வெள்ளத்தில் அந்த வீதியிலே விழுந்துள்ளான். அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், எங்களுக்கு சரியாக மாலை 4.36 மணிக்கு தகவல் வந்தது. இதனால் ஆம்புலன்சுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம். இதைத் தொடர்ந்து அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
பல முறை குத்தியுள்ளதால் இரத்தம் வெளியேறியுள்ளது.

இதனால் மாணவனின் உயிருக்கு ஆபத்தா? இல்லையா என்பது குறித்து மருத்துவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை என பொலிசார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 18 வயது, 19 வயதுடைய இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் துப்பாக்கி இருந்ததாகவும், அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் 53 வயது நபருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதால், அந்த நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top