News

லண்டன் சாலையில் வாளால் கார் பயணியை தாக்கிய கொடூரம் !

லண்டனில் பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் வாளால் கார் பயணியை தாக்கி மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள கிராய்டனில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த நபர் கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார். இதில் அவர் அந்த கார் மோதி சாலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் நீளமான வாள் போன்ற கத்தியை உருவி கார் பயணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் லண்டன் நகர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 67 பேர் இதுபோன்ற தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 37 பேர் கத்திக்குத்துக்கு இரையானவர்கள் ஆவர்.

2017 ஆம் ஆண்டில் மட்டும் 37,443 கத்திக்குத்து வழக்குகள் பிரித்தானியா முழுவதும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top